×

விராலிமலை ஒன்றியம் 15வது வார்டில் மறு வாக்குப்பதிவு மந்தம்

விராலிமலை, டிச.31: விராலிமலை ஒன்றியத்தை சேர்ந்த 15வது வார்டு ஒன்றிய கவுன்சிலருக்கு நடைபெற்ற மறு வாக்குபதிவில் 73.7 சதவீதம் வாக்கு பதிவானது. விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 2 மாவட்ட கவுன்சிலர், 21 ஒன்றிய கவுன்சிலர். 45 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்காக தேர்தல் கடந்த 27 தேதி நடைபெற்றது. இதில் 15வது வார்டு பாக்குடி, கோங்குடிப்பட்டி மற்றும் பேராம்பூர் ஊராட்சிகளில் 5,366 வாக்காளர்கள் உள்ளனர். இந்த 15வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 9 பேர் போட்டியிட்டனர். இந்த 3 ஊராட்சிகளிலும் 20 வாக்குசாவடி மைங்களில் கடந்த 27ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதில் சுயேட்சையாக போட்டியிட்ட சேகர் எனபவருக்கு வாக்கு செலுத்தும் சீட்டில் ஸ்பேனர் சின்னத்திற்கு பதில் ஸ்குரு சின்னம் இருந்தது. சின்னம் மாறியதையடுத்து அதற்காக மறு வாக்கு பதிவு நேற்று நடைபெற்றது. 1 வாக்கு பதிவு என்பதினால் வாக்கு பதிவு நேற்று காலை முதல் மந்தமாக நடைபெற்றது. சில நேரத்தில் வாக்கு சாவடிகள் வெறிச்சோடியது. ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவர்கள் வாக்காளர்கள் வாக்கு செலுத்த வராததால் மிகவும் சோர்வடைந்தனர். பின்னர் வாக்கு பதிவுகள் சகஜமாக நடைபெற தொடங்கியது. இறுதியில் 73.7 வாக்குகள் பதிவானது. இது கடந்த 27ம்தேதி நடைபெற்ற வாக்குப்பதிவை விட 4 சதவீதம் குறைவானதாகும். குக்கிராமத்தை சேர்ந்த சிலர் கூலி வேலைக்காக வெளியூர் சென்று விட்டதால் இந்த 4 சதவீத வாக்கு குறைந்ததுக்கு காரணம் ஆகும்.

Tags : Ward ,Wiralaimalai Union ,
× RELATED மாதவரம் மண்டலம் 24வது வார்டில் உள்ள...